கோவை ஞானி என்று அழைக்கப்படும் கி. பழனிச்சாமி ஒரு தமிழாசிரியர். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தீவிர தமிழிலக்கியச் சிந்தனையாளர், கோட்பாட்டாளர் மற்றும் திறனாய்வாளராக இயங்கி வருகிறார். 'இடைவிடாது இயங்கிவரும் ஆய்வறிஞர் ஞானிக்குள் தமிழ் இயங்குகிறது' என்று இவரை வர்ணிப்பார்கள். 

2.jpg

ஞானியின் வாழ்கைத் தடம்

 தமிழகத்தில் கோவை வட்டாரத்தில் 1935 இல் பிறந்து கிராமச் சூழலில் வளர்ந்தவர்.  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் கற்றவர். கோவையில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றியவர். மார்க்சிய நெறியில் தமிழிலக்கிய ஆய்வில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறார். தமிழ் மரபையும் மார்க்சியத்தையும் இணைத்ததன் மூலம் தமிழ் மார்க்சியத்தை படைத்துள்ளார்.    

8.jpg

ஞானி - படைப்பும் பார்வையும் 

 கோவை ஞானி கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளதோடு தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். இவை அனைத்தையும் அடுத்து வரும் பக்கங்களில் பார்க்கலாம்.

 

4b.jpg

ஞானி - விருதுகள்

இவர் தமிழ்ப் பணிக்காக புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998), கனடா–தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010), எஸ்.ஆர்.எம்.  பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013) முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழோடுதான் தனக்கு வாழ்வு என்பதில் நிறைவு காண்கிறார்.  



ஞானியுடன் நேர்காணல்- 1

150 வருட கால தமிழ் இலக்கிய வரலாற்றுக்குள் என்ன நடந்தது எது நடைபெறவில்லை என்பது பற்றி ஞானியோடு சித்தன்னுடைய நேர்காணல். (ஆடியோ இயங்க சற்று  காத்திருக்கவும்)

ஞானியுடன் நேர்காணல் - 2

யோகா செந்தில் ஞானியுடன் பதிவுசெய்த நேர்காணல். இதில் ஞானி பிரபஞ்சம், இலக்கியம், மெய்யியல், சமதர்மம், காந்தி, தமிழ் ஈழம் பற்றி பேசுகிறார். (ஆடியோ இயங்க சற்று  காத்திருக்கவும்)


ஞானியுடன் நேர்காணல் - 3

ஞானி தன் மகன் மாதவனோடு பதிவுசெய்த நேர்காணல். இதில் ஞானி, பாரதியார் பாரதியார் பற்றி , திருவள்ளுவர், பிரபஞ்சம், இலக்கியம், மெய்யியல், கனவுகள் பற்றியெல்லாம் பேசுகிறார். (ஆடியோ இயங்க சற்று  காத்திருக்கவும்)